மதுரை சிறையில் தி.மு.க. தலைவர்கள் உண்ணாவிரதம்
மதுரை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட 3,000தி.மு.கவினர் மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் தொடங்கினர்.
சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், மதுரை நகர மேயர் குழந்தைவேலு, முன்னாள் சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதியை கைது செய்ததை எதிர்த்து, தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர் அக்னிராஜ், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் மதுரையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இவர்கள் அனைவரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் ஏற்கனவே சிறைக்குள் உள்ள தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து சிறையிலும் அடையாளஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை முழுவதும் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறை அதிகாரிகள் கூறும்போது,
தி.மு.க. தொண்டர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக திங்கள்கிழமை பின்னிரவில்தான் தெரிவித்தனர். இதனால்இவர்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன.
இந்தச் சிறையில் 1,200 பேரை மட்டுமே தங்க வைக்க முடியும். ஏற்கனவே இங்கு 1,900 பேர் உள்ளனர் இந்நிலையில் மேலும்2,900 தி.மு.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறைக்கு வந்துள்ளனர்.
இருந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. தொண்டர்கள் சிறை விதிமுறைப்படி நன்கு கவனிக்கப்படுவார்கள் என்றுசிறை அதிகாரிகள் கூறினர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications