தமிழக அரசைக் கலைப்பதற்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர்கைது செய்ததைக் காரணம்காட்டி, தமிழக அரசைக் கலைக்கக் கூடாது எனத் தெலுங்கு தேசம் கட்சிதெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக நிலையை அறிய ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையிலான மூவர் குழு சென்னை வந்தது. அதே போல் மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர்கவுஷல் தலைமையிலான ஒரு குழுவும் சென்னை வந்தது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதால் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிமத்திய அரசிடம் இவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 356ன் படி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கூடாது என்று தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள்மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் காரணம்காட்டி ஒரு போதும் ஜனாதிபதிஆட்சியை அமல்படுத்தக் கூடாது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.
இதற்கிடையே வாஜ்பாய் தலைமையில் மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மாலை கூடுகிறது. இந்தக்கூட்டத்தில் மத்திய அரசு தலைமை வக்கீல் (அட்டர்னி ஜெனரல்) சோலிசோரப்ஜி சட்டரீதியான சிக்கல்கள் குறித்துக்கருத்துக் கூறுகிறார்.
வெளிநாடு சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லிதிரும்புகிறார். அவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னையில் மேம்பாலங்கள்கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அடித்துஇழுத்துச் செல்லப்பட்டார்.
கருணாநிதியைப் போலீஸார் கைது செய்யப்படும்போது போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாகமத்திய அமைச்சர்கள் மாறனும், டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், தங்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளஅனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றால் மட்டுமே நாங்கள் சிறையிலிருந்து வெளியேறுவோம் என்றுஇவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications