ஜனாதிபதி நடுநிலையான முடிவெடுக்க வேண்டும்: தாக்கரே
மும்பை:
தமிழக பிரச்சனையில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தலையிட்டு நடுநிலையான முடிவெடுக்க வேண்டும் என்றுசிவசேனை தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிவசேனை பத்திரிக்கையான சாம்னாவில் பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 2 மத்திய அமைச்சர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி தமிழக நிலைமை குறித்து விவாதிக்க உள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு கொடுக்காவிடில், இதுபோன்ற சம்பவங்கள்வேறு மாநிலங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.
தமிழக நிலைமை குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரம்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத ஒரு நபர் எப்படி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க முடியும்? இதுகுறித்துதேர்தல் ஆணையம் பதில் எதுவும் கூறாமல் இருப்பதுதான் வேடிக்கையானது.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தமிழக பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக, நடுநிலையான தீர்வு கூறவேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் பால் தாக்கரே.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications