தமிழக அரசு - மத்திய அரசு புதிய மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசும், பிரதமரும் கேட்டுக் கொண்டதால் தான் அமைச்சர்கள் முரசொலி மாறன்மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றதாகதமிழக அரசு கூறியிருப்பதை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது காவல் துறையினரை தங்கள்கடமையை செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன்மீதும், டி.ஆர். பாலு மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற்கும், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசு கடும்கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து மத்திய அமைச்சர்களை ஜாமீனில் விடுதலை செய்யவதாகவும்,ஆனாலும் அவர்கள் மீதுள்ள வழக்குகள் தொடரும் எனவும் தமிழக அரசு முதலில்அறிவித்தது.

ஆனால் தங்கள் மீதுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே விடுதலையைஒப்புக் கொள்வோம் என மாறனும் பாலுவும் கூறிவிட்டனர்.

இந்நிலையில் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு மீது தொடரப்பட்ட அனைத்துவழக்குகளையும் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று, அவர்களைவிடுதலை செய்தது.

இவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்துவாய்மொழி உத்தரவு வந்ததாக தமிழக அரசு கூறியது. இதையடுத்துத் தான்வழக்குகளை வாபஸ் பெற்றதாகவும், இதன் மூலம் மத்திய அரசுடன் நல்லுறவைப்பேண தமிழகம் முடிவு செய்தது எனவும் அமைச்சர் பொன்னையன் டெல்லியில்கூறினார்.

இதையே தான் ஜெயலலிதாவும் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் தமிழகஅரசின் இந்தக் கூற்றை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர் பாலு ஆகியோர் மீது தொடரப்பட்டவழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்ததால், அதைஏற்றுக்கொண்டு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தவறான செய்தி. முன்னுக்கு பின் முரணானது. பிரதமர் இது போன்று தமிழகஅரசிடம் கேட்டுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+