இன்று அமெரிக்க சுதந்திர தினம்: தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
டெல்லி:
அமெரிக்காவின் சுதந்திரதினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருவதையடுத்து டெல்லியில் இருக்கும்அமெரிக்க தூதரகத்திற்கு காவல் பலப்படுத்தப் பட்டுள்ளது.
சென்ற மாதம் சூடான் நாட்டைச் சேர்ந்த அப்துல் ராக்ப் ஹவாஷ் என்பவரும், 3 இந்தியர்களும் அமெரிக்கதூதரகத்தின் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.அவர்கள் திட்டமும் முறியடிக்கப்பட்டது.
இவர்களில் ஹவாஷ் என்பவர், சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனுடன் தொடப்புடையவர் எனதெரியவந்தது. அவரிடமிருந்து 6 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளும், வெடிபொருட்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இவர் அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, பலமுறை அப்பக்கம் சென்று, பல வரைபடங்களைவரைந்து தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஒசாமா பின் லேடனின் கூட்டாளிகள் இந்தியாவில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தின் போது, அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தக்கூடும் என்பதால் டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு பலத்த காவல் போடப்பட்டு உள்ளது.
இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.எஸ். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறுயையில்,அமெரிக்க தூதரத்தை சுற்றி போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க தூதரகங்கள் மற்றும்அமெரிக்க நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என 2 வாரங்களுக்கு முன்பு உளவுத்துறையினர் கூறியதையடுத்து, தற்போது அந்த இடங்களில் காவல் பலப்படுத்தப் பட்டுள்ளது என்றார்.
பல அயல்நாட்டு அதிகாரிகள் வசிக்கும் சனக் புரி பகுதியைச் சுற்றிலும் சீருடை அணியாத காவலர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு சோதனை சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வருபவர்கள்அனைவரும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அந்த பகுதிக்கு வாகனத்தில்வருபவர்கள் உன்னிப்பாக கண்காணிகப்படுகிறார்கள்.
புதன்கிழமை பல உயர் அதிகாரிகள் அமெரிக்கத் தூதரகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனால்,முக்கியமான எல்லா இடங்களிலும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று போலீஸ் அதிகாரிகள்கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications