"ஜெ. பணியாவிட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
சென்னை:
போலீஸ் மீது ஜெயலலிதா நடடிவக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்கஜெயலலிதா அரசு மறுத்தால், தமிழக அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிஎடுக்காவிட்டால், அது மத்திய அரசே அல்ல என்றார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
சிறையிலிருந்து விடுதலையான பின்னர், அவர் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவருடைய பதில்களும்:
அரசியல் சட்டம் 356வது பிரிவு தமிழகத்தில் அமல்படுத்தப் படுமா?
முதல் நடவடிக்கையாகத்தான் தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நேரத்தில் ஒன்றைக்குறிப்பிட விரும்புகிறேன். தற்போது 356வது சட்டப் பிரிவை உபயோகப்படுத்தக் கூடாது என்ற காங்கிரஸ்கூறுகிறது.
ஆனால், இதுவரை சுமார் 105 முறை இந்தச் சட்டம் பயன்படுத்தப் பட்டுள்ளது. முக்கால்வாசிக்கும் மேலாககாங்கிரஸ் ஆட்சியில்தான் இப்பிரிவு பயன்படுத்தப் பட்டுள்ளது. அது காங்கிரசுக்கு மட்டுமே சொந்தம் போலும்.வேறு யாருமே பயன்படுத்தக் கூடாதாம்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால், உபயோகப்படுத்தத்தான் செய்வார்கள்.
இப்போதைக்கு அச்சட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறதா?
அதை பத்திரிகையாளர்களாகிய, பரந்த அறிவு நிரம்பிய, புத்திசாலிகளாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதைஉங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக இருக்குமா?
அது அவ்வப்போது நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தது.
ஜெயிலில் உங்களை எப்படி நடத்தினார்கள்? ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?
சாதாரண கைதியை எப்படி நடத்துவார்களோ, அப்படித்தான் என்னையும் நடத்தினார்கள். சிறை அதிகாரிகள்எனக்கெதிராக கொடுமைகள் எதுவும் பண்ணவில்லை. இதை நான் இப்போது சொல்வதால், அவர்களுக்கும் எந்தக்கொடுமையும் நிகழப் போவதில்லை. நன்றாகவே அவர்கள் என்னை நடத்தினர்.
போலீஸ் பற்றி?
40,000 திமுகவினர் கைது செய்யப்பட்டனர் என்று கேள்வி. ஆனால் 4,000 பேர்தான் என்று போலீஸ் கூறியுள்ளது.சைபருக்கு மதிப்பில்லை என்று அவர்கள் ஒரு சைபரை விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
அராஜகம் செய்து என்னைக் கைது செய்வதை முன்னாள் டிஜிபி ராஜகோபாலன் விரும்பவில்லை போலிருக்கிறது.அதனால்தான் அவர் தூக்கி எறியப்பட்டு, ரவீந்திரநாத் பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும் "எய்தவன் இருக்கஅம்பை நோவானேன்?" எய்தவர்கள் யாரோ இருக்க, இவரைச் சொல்லி என்ன பயன்?
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications