பிரபாகரனின் முக்கிய உதவியாளருக்கு வலைவீச்சு
டெல்லி:
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கூட்டாளியான கே. பத்மநாபாவைத் தேடும்முயற்சியில் இந்திய்ப புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மும்முரமாக இறங்கியுள்ளது.
கே.பி. என்று அழைக்கப்படும் இவருக்கு டி.எஸ். குமரன் என்ற பெயரும் உண்டு. விடுதலைப் புலிகளுக்குஇவர்தான் நிதி திரட்டி உதவிகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் கொலை பற்றி விசாரித்து வரும் ஜெயின் கமிஷனின் உத்தரவின் பேரில், விடுதலைப் புலிகளுக்குபைனான்ஸ் பண்ணுவது யார் என்ற விசாரணையில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியது.
பத்மநாபாதான் பைனான்ஸ் பண்ணுகிறார் என்று தெரிந்ததும், சி.பி.ஐ. தன்னுடைய தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியது. அவர் ஸ்வீடனில் இருப்பதாக முதலில் தகவல் கிடைத்தது. ஆனால் அந்நாட்டு அரசைத்தொடர்பு கொண்டு சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்தபோது அதைத் தெரிந்து கொண்ட பத்மநாபா அங்கிருந்துஉடனடியாகத் தப்பிவிட்டார்.
இதையடுத்து, அவர் தாய்லாந்துக்கும், பின்னர் அங்கிருந்து ஹாங்காங்கிற்குப் பறந்ததாகவும் கேள்விப்பட்டசி.பி.ஐ., அங்கேயும் போய்த் தேடிப் பார்த்தது. ஆனால், சி.பி.ஐயைவிட அதி வேகத்தில் செயல்பட்ட பத்மநாபாமீண்டும் தப்பிவிட்டார்.
இதற்கிடையே, 2 மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்துக்கும் சி.பி.ஐ. சத்தமில்லாமல் சென்றுவந்துள்ளது. பத்மநாபாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் 2 இலங்கைத் தமிழர்களையும் ஒருசீக்கியரையும் 2 வாரங்களாகத் தோண்டித் துருவி விசாரித்துள்ளது.
ஆனால், அங்கும் சி.பி.ஐ.க்கு எந்தவிதமான பிடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த விசாரணைக்குஅந்த 2 நாட்டு புலனாய்வுத் துறையினரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்கள் என்று மட்டும் சி.பி.ஐ. கூறுகிறது.
இதைத் தொடர்ந்து, பத்மநாபா வேட்டையை சி.பி.ஐ. மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர்இவர் இந்தியாவில் இருந்தார் என்றும், விடுதலைப் புலிகளுக்குப் பாதுகாப்பாக வீடுகள் ஏற்படுத்திக் கொடுத்தார்என்றும் கூறப்படுகிறது.
இவர் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். பல்வேறு பெயர்களில் ஏராளமானபாஸ்போர்ட்டுகளை வைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications