சென்னை சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு
சென்னை:
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் தன்னை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல்செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து சனிக்கிழமை ஸ்டாலின் தானே சென்னை சைதாப்பேட்டைசெசன்ஸ் நீதிபதி அசோக் குமாரிடம் ஆஜரானார். அவரை 14ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி அவரை சென்னைசிறையில் அடைக்க வேண்டும் எனக் குறிப்பான உத்தரவையும் பிறப்பித்தார்.
ஆனால், கருணாநிதியையும் ஸ்டாலினையும் ஒரே சிறையில் வைக்க விரும்பாத அரசு ஸ்டாலினை மதுரை சிறைக்குக் கொண்டு சென்றது.போலீஸ் வேனிலேயே அவரை மதுரை கொண்டு சென்றனர்.
இந் நிலையில் மேம்பால ஊழல் வழக்கு விசாரனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்போது, ஸ்டாலினை மதுரைக்குக் கொண்டுசென்றதை மிகக் கடுமையாக கண்டித்த நீதிபதி இது தொடர்பாக அரசையும் கடிந்து கொண்டார். ஸ்டாலினை மதுரைக்குக் கொண்டுசெல்லும்போது ஏதாவது விபத்து நடந்திருந்தால் யார் பொறுப்பு எனக் கேட்ட நீதிபதி அவரை எதற்காக மதுரை கொண்டு சென்றீர்கள்எனவும் கேட்டார்.
ஸ்டாலின் மனு:
இந் நிலையில் ஸ்டாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,சைதாப்பேட்டே செசன்ஸ் நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி என்னை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.
என்னை சென்னை தவிர பிற சிறைகளில் அடைத்தால் எனக்கும் எனது மனைவிக்கு அது பாதுகாப்பாக இருக்காது என்பதைக் கூறித் தான்சென்னை சிறையில் அடைக்க நீதிபதியிடம் அனுமதி வாங்கினேன்.
ஆனால், அதை போலீசும் அரசும் மீறிவிட்டது. இதனால் எனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications