கனடா திரைப்படவிழா: ஒரு இந்தியப் படம் கூட இல்லை!
டொரான்டோ:
கனடாவின் டொரான்டோ நகரில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக 300க்கும்மேற்பட்ட திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், உலகிலேயே அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் இந்தியாவிலிருந்து ஒரு படம் கூட இந்த விழாவுக்குத்தேர்ந்தெடுத்தப்படவில்லை.
இருப்பினும் திரைப்படவிழா முடிவில், சில இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனஎன்பதுதான் ஆறுதலான விஷயம்.
கனடா தலைநகர் டொரான்டோவில் செப்டம்பர் மாதம் 6 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாநடக்கிறது.
பல மொழிப்படங்களைத் திரையிடுவதற்காக 20 பெரிய திரைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.திரைப்படவிழாவில் ஆங்கிலம் தவிர சீனா, தைவான், ஹாங்காங் மற்றும் ஜப்பானிய திரைப்படங்கள்காண்பிக்கப்படும்.
முன்பு நடந்த திரைப்பட விழாக்களில் பல இந்தியத் திரைப்படங்கள், டாக்குமென்ட்ரி படங்கள்காண்பிக்கப்பட்டன. இவைகள் ஏராளமான மக்களைக் கவர்ந்திழுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன் டொரான்டோவில் நடந்த திரைப்பட விழாவில் சேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் பியர்ஸ் ஹேன்டலிங் கூறுகையில், இந்த வருடம் நடக்கவுள்ள விழாவில்கனடா திரைப்பட வரலாறு, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோரைப் பற்றிய நிகழ்ச்சிகளை காண்பிக்கவும்திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தற்போது நடக்கவுள்ள திரைப்பட விழா, கனடாவின் 26 வது சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்ததிரைப்படவிழாவில் திரையிடப்படும் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications