நீதிபதி அசோக்குமார் கார் மீது மோதல்: ஜெயா டிவி கார் டிரைவர் கைது
சென்னை:
சென்னை நகர முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக இருந்துவரும் அசோக்குமார் கார் மீது ஜெயா டிவிக்குச்சொந்தமான கார் மோதிது. இதில் அசோக்குமார் காயமின்றி தப்பினார்.
சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை நகர மேயர்மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த மேம்பால ஊழல் வழக்கை நீதிபதி அசோக்குமார்தான் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை தனது நீதிமன்ற பணிகளை முடித்து அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇருந்த தனது உறவினரை பார்த்து விட்டு அசோக்குமார் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஜெயா டிவிக்குச் சொந்தமான கார் அசோக்குமார் கார்மீது மோதியது. இதில் அசோக் குமார் காயமின்றி தப்பினார். ஆனால், அவருடைய கார் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து, அசோக்குமாரின் கார் டிரைவர் புகழேந்தி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்அடிப்படையில், அண்ணா சதுக்கம் போலீசார் ஜெயா டிவி கார் டிரைவர் ஹரியை கைது செய்யதனர். பின்னர் அவர்ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த விபத்து சாதரணமான விபத்துதான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து, நீதிபதி அசோக்குமார் அ.தி.மு.க. அரசுக்கு முன்பு எச்சரிக்கைவிடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications