எதையும் மூடி மறைக்கவில்லை: பாத்திமா பீவி பேச்சு
திருவனந்தபுரம்:
ஆளுநருக்குரிய கடமையைத்தான் செய்தேன் என்றார் முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். நான்ஏதோ மிகவும் தாமதமாகத்தான் என்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதாக என்மேல் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால் எல்லாம் ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்துதான் இருக்கிறது. நான் எதையும் மூடிமறைக்கவில்லை. நடந்த எல்லாவற்றையும் நீங்கள் பார்க்கத்தான் செய்தீர்கள்.
ஏதோ இப்போதைக்கு உங்கள் முன் இருப்பதால்தான் நான் இவ்வளவையும் பேசுகிறேன். இதுவே தமிழ்நாடுஎன்றால், நான் இதைக்கூட பேசியிருக்க முடியாது.
நான் இந்த நிமிடம் வரை சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். தற்போது நடந்த எந்த சம்பவத்திற்காகவும் நான்வருத்தப்பட்டது கிடையாது என்றார் பாத்திமா பீவி.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஏன் எந்த ஒரு சமரசப் பேச்சையும் எடுக்க முயற்சிக்கவில்லை என்றகேள்விக்கும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவை அழைத்து தமிழக முதல்வராக ஏன்பதவியில் உட்கார வைத்தீர்கள் என்ற கேள்விக்கும் பதில் அளிக்க பாத்திமா பீவி மறுத்து விட்டார்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்செயலாளர் சங்கர், அமைச்சர்கள், டிஜிபி ஏ. ரவீந்திரநாத் ஆகியோர் பாத்திமா பீவியை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவர் ராஜ்பவனை செவ்வாய்க்கிழமையே காலி செய்துவிட்டு வெளியேறினார். அவர் டெல்லிக்கோஅல்லது கேரளாவுக்கோ போயிருக்கக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் சென்னையில் தான்இருந்துள்ளார். வியாழக்கிழமை தான் அவர் கேரளா போனார்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications