இலங்கையில் அமெரிக்க ராணுவ அதிகாரி
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்திப்பதற்காக அமெரிக்க பசிபிக் ராணுவப் படையின் தலைமைத்தளபதி அட்மிரல் டென்னிஸ் பிளேர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.
1995ம் ஆண்டுக்கு அப்புறம் ஒரு அமெரிக்க ராணுவ உயரதிகாரி இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை.
ராணுவத்தினருக்கு கமாண்டோ பயிற்சியிலிருந்து, கப்பல் படையினருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி வரை,இலங்கை ராணுவத்திற்குப் பல வழிகளில் பயிற்சி அளித்துள்ள பெருமை அமெரிக்காவையே சேரும். இலங்கைராணுவத்திற்காக பல்வேறு பயிற்சி முகாம்களை அமெரிக்கா நடத்தியிருக்கிறது.
மேலும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரும்பெரும்முயற்சிகளை எடுத்து வரும் நார்வே தூதுக் குழுவினரை முழுக்க முழுக்க உற்சாகப்படுத்தி வருகிறது அமெரிக்கா.நார்வே தூதுக் குழுவினர், தற்போது புதிய தலைமையுட னும் புதுப் பொலிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த வார இறுதியில், விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய ஷெல்தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது. பேச்சுவார்த்தை நடப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் இந்த வேளையில், ஷெல் தாக்குதலை நடத்தியிருப்பது பேச்சுவார்த்தைக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாகும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரி பிளேர் இலங்கைக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது. ஆனால், 2 நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகத்தான்பிளேரின் இந்த விசிட் என்கிறது ஒரு இலங்கைப் பத்திரிகை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications