மதுரை சிறையில் ஸ்டாலினைச் சந்தித்தனர் குடும்பத்தினர்
மதுரை:
மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை பிற்பகல் அவருடைய குடும்பத்தினர்சென்று சந்தித்தனர்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருடைய மகனும், சென்னை மாநகர மேயருமான ஸ்டாலின், தானாகவேநீதிபதியின் முன் சரணந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்டாலினைப் பார்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை வரை போலீஸார் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அவருடைய மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, அன்பில் பொய்யாமொழியின்மகன் மகேஷ் ஆகியோர் புதன்கிழமை பிற்பகல் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். இவர்களுடன் மதுரை மேயர்குழந்தைவேலுவும் வந்திருந்தார்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஸ்டாலினைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 45 நிமிடம் அவரைச்சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர், துர்கா நிருபர்களிடம் பேசியபோது:
என் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. சென்னை சிறைக்கு அவரை மாற்றினால், அடிக்கடி அவரைப்பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். அவர் மீது ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்குத்தெரியாது.
வழக்கு பற்றி அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. ஆனால் சட்டப்படி வழக்கைச் சந்திப்பேன் என்று அவர்ஏற்கனவே கூறியுள்ளாரே?
அவர் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்பது எல்லோருக்குமே தெரியும்.
மனிதாபிமான அடிப்படையில் தலைவரை விடுதலை செய்துள்ளதாகக் கூறினார்கள். அடித்து, இழுத்துக் கொண்டுசென்ற போது, இந்த மனிதாபிமானம் எங்கே போனது? ஒரே வழக்குதானே, மற்றவர்களையும் விடுதலைசெய்துவிட வேண்டியதுதானே என்றார் ஸ்டாலினின் மனைவி துர்கா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications