கருணாநிதி, ஸ்டாலின் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை: ராமதாஸ்
சென்னை:
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும் அவரது மகன் சென்னைநகர மேயர் ஸடாலின் மீதும் போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கருணாநிதி கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது என விசாரணை அதிகாரிதெரிவித்திருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்
கருணாநிதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை ராமதாஸ் வரவேற்றார். அப்போது அவர்செய்தியாளர்களிடம் கூறும்போது:
இப்போது கிடைத்த பாடத்தை கருத்தில் கொண்டு இனிமேலாவது போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவேண்டும். மனித உரிமை மீறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. மேம்பால வழக்கை விசாரிக்கும்ஒரு விசாரணை அதிகாரி, இனி கருணாநிதி கைது செய்யப்பட மாட்டார் என்று என்னிடம் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக ஆச்சார்யலு பதவி ஏற்றவுடன், அவர் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல்இருப்பதை கண்டு பிடித்துள்ளார். ஆனால், தனது அறிக்கையை சிபிசிஐடிக்கு அனுப்பும் முன் அவர்வழக்கறிஞர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்கவில்லை.
ஆச்சார்யலுவின் இந்த நடவடிக்கை பற்றி பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக தலைமைச் செயலாளரிடம் குறைகூறியுள்ளனர். அவர் பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
நான் கருணாநிதியை சிறையில் பார்த்த போது அவர் உடல்நிலை மோசமாக இருந்தது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ்செய்யப்பட வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாட்டின் ஜனநாயகத்திற்குஊறுவிளைவிக்கும்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் அவருக்கு சிகிச்சை அளிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனாலும் போலீசார்நீதிபதியின் உத்தரவை செயல்படுத்தவில்லை.
கருணாநிதியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.கே. நம்பியாரையும் விடுவிக்கவேண்டும். மேலும் பல அதிகாரிகள் மீது போட்டப்பட்டுள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications