துண்டில் சோறு வாங்கி சாப்பிட்ட கைதிகள்
கடலூர்:
சிறையில் கைதிகளுக்கு சாப்பிட இலை, தட்டு கூட கொடுக்காமல் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துண்டில் உணவுவாங்கி சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதை மனித உரிமைகள் குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.
கடலூர் சிறையில் கைதிகள் மீது மனித உரிமைகள் மீறப்படுவதாக வந்த புகாரையடுத்து, ஜெயிலுக்கு வந்த இந்தமனித உரிமை குழுவில் மூத்த உறுப்பினர் நீதிபதி சாமிதுரை, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் சுசீலா ராஜ்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது:
தி.மு.க. பொது செயவாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மத்திய அமைச்சர்கள் ராஜா, எம்.பி.குப்புசாமி ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி மனு கொடுத்தனர்.
இதன்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியை சென்னை சிறையில் சென்று சந்தித்தோம். தொடர்ந்து, தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 100 பேரையும் சந்தித்தோம்.
1,800 பேர் மட்டுமே இருக்கும் வசதி உள்ள சிறையில் 4,000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்குஉணவு, தண்ணீர், கழிப்பிட வசதி கூட முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. சில இடங்களில் திறந்த வெளியில்படுத்து உறங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
ரெட்ஹில்ஸ் சிறையில் கைதிகளுக்கு சாப்பிட இலை, தட்டு கூட கொடுக்காமல் அவர்கள் தாங்கள் வைத்திருந்ததுண்டில் உணவு வாங்கி சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய, மாநிலஅரசுகளுக்கு அறிக்கை அனுப்பி வைப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த வக்கீல்களை கேட்டை பூட்டிவிட்டு,போலீஸ் எஸ்.பி. கடுமையாக தாக்கி இருக்கிறார். மாவட்ட கலெக்டர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்றுவலியுறுத்துவோம் என்றனர்.
மனித உரிமை குழுவினர் கடலூர் மத்திய சிறையிலும் விசாரணை செய்தனர்
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications