கருணாநிதியை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: டி.ஜி.பி. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதியை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தமிழககாவல்துறை டி.ஜி.பி. ரவீந்திரநாத் திட்டவட்டமாகக் கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தமிழக கிரைம் பிராஞ்ச் சி.ஐ.டி. (சி.பி.சி.ஐ.டி.)போலீசாரால் முரட்டுத்தனமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைத் தடுக்க முயன்ற மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோருக்கும் அடி விழுந்தது.அவர்கள் பிரதமரின் அனுமதி இல்லாமலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாறன் உடல்நிலை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டார்.

இது குறித்து விசாரித்த மத்திய அரசு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறுதமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்துறை அமைச்சகம்மூலமாக ஜெயலலிதா அரசுக்கு புதன்கிழமை உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த உத்தரவில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தவறுகளைத் திருத்திக் கொள்ளுமாறும் எச்சரிக்கைசெய்யப்பட்டிருந்தது.

மத்திய அரசு உத்தரவு புறக்கணிப்பு:

ஆனால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. ரவீந்திரநாத் கூறுகையில், மத்திய அரசின் உத்தரவு புதன்கிழமைநள்ளிரவு தான் தமிழக அரசுக்கு வந்தது. அதன் நகலை தலைமைச் செயலாளர் எனக்கு அனுப்பி வைத்தார்.

அதில் என்ன உள்ளது என்பதை விரிவாக படிக்க வேண்டும். அதே நேரத்தில் போலீசார் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கப்பட மாட்டாது. அவர்களை இடமாற்றம் செய்வது என்பது குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் (காவல்துறை) பக்க பலமாக நிற்கிறது என்றார்.

மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கெடு எதையும் விதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மத்தியஅரசின் எச்சரிக்கை உத்தரவுக்கு எந்த மாதிரியான பதில் அனுப்பலாம் என்பது குறித்து ஜெயலலிதா தனது மூத்தஅதிகாரிகளுடன் விவாதித்து வருகிறது.

இந்தப் பிரச்சனையில் அவசரமாக செயல்பட்டு அரசியல் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் எனகூட்டணிக் கட்சிகளும் அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு யோசனை கூறி வருகின்றனர்.

இப்போது மத்திய அரசின் உத்தரவை மீறுவது போல ஜெயலலிதா அரசு காட்டிக் கொண்டாலும் வாஜ்பாய் அடுத்தஎச்சரிக்கை தந்தால் பணிந்துவிடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+