ஸ்டாலின் ஜாமீன் மனு: இன்று விசாரணை
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, மதுரைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்குவருகிறது.
தன்னை ஜாமீனில் விடும்படி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது:
சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலுகடந்த 29 ம் தேதி சிபிசிஐடி போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அதே நாள் நள்ளிரவு 2 மணிக்கு என் அப்பாவைக் கைது செய்து காலை 6 மணிக்குத்தான் நீதிபதிமுன்பு ஆஜர்படுத்தியுள்ளனர் என்று அறிந்து கொண்டேன்.
அப்பாவைக் கைது செய்த நேரத்தில் வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.என்னைப் போலீஸார் தேடுகிறார்கள் என்று அறிந்து கொண்ட நான் 30 ம் தேதி காலை போலீசில் சரணடைந்தேன்.
நீதிபதி என்னை சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் கோர்ட் உத்தரவையும் மீறி நான்மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.
சென்னையில் மேம்பாலங்கள்:
சென்னை போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக மேம்பாலங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், என்ஜினியர்கள் அடங்கிய போக்குவரத்து மேம்பாடு கமிட்டிஅமைக்கப்பட்டது.
இதுதவிர தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்ட உயர்மட்டக் கமிட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்தஇரண்டு கமிட்டிகளின் ஆலோசனைப்படி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே மினி மேம்பாலங்கள் கட்டமுடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் மேம்பாலங்கள் கட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் தலைமைச் செயலாளர்ஏ.பி.முத்துசாமி, சாலைப் போக்குவரத்து நிபுணர் சீனிவாசன் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.
நான் கோர்ட் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். எனவே என்னை ஜாமீனில்விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதே போல் முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, பொன்முடி ஆகியோரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்செய்துள்ளனர். மேலும், முன்னாள் தலைமைச் செயலர் நம்பியார், என்ஜினியர் ராகவன் ஆகியோரும் ஜாமீன்மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications