லண்டன்: நோயாளிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க டாக்டர்கள் திட்டம்
லண்டன்:
நோயாளிகளைப் பரிசோதிக்கும் நேரத்தை 7 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாக உயர்த்த இங்கிலாந்துமருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது.
இங்கிலாந்தில் நோயாளிகளைப் பரிசோதிப்பதற்கு 7 நிமிடம் போதாது என்று இந்திய டாக்டர் ஒருவர்தான்பிரச்சனையை முதலில் எடுத்து வைத்தார். இப்போது நோயாளிகளைப் பரிசோதிப்பதற்கான நேரம் 7 நிமிடம் தான்.
சந்த் நாக்பால் என்ற இந்த டாக்டருக்கு, இந்த 7 நிமிடத்தால் பல சோதனைகளாம். கடந்த வாரம் கூட, ஒரு புற்றுநோயாளி தன்னிடம் வந்ததாகவும், 7 நிமிடத்திற்குள்ளாகவே அந்த நோயாளியைத் துரத்த நேர்ந்ததாகவும் கூறிசந்த் வருத்தப்பட்டார்.
இந்த நிலை எந்த ஒரு நோயாளிக்கும் வரக்கூடாது. ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். பலநோய்களைப் பற்றிய பிரச்சனைகளை அந்த நோயாளிகள் சொல்லாமல் கூட விட்டுவிடலாம். அந்தப்பிரச்சனைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தானே நாம் அவர்களிடமிருந்து கறக்க வேண்டியுள்ளது. இதற்குஇந்த 7 நிமிடம் போதவே போதாது.
வாழ்க்கை பூராவும் கஷ்டப்படப் போகிறவர்கள் அவர்கள். அவர்களுக்கு நாம் 7 நிமிடம் மட்டும்தான்பரிசோதனைக்கு ஒதுக்கப்பட்டால் என்ன நியாயம் என்று மருத்துவ சங்கக் கூட்டத்தில் ஆவேசமாகக் கேட்டார் சந்த்.
அவர் சொன்ன கருத்தை மருத்துவ சங்கத்தில் உள்ள ஏராளமான டாக்டர்களும் ஆதரித்தனர். இதன் விளைவாக,நோயாளிகளைப் பரிசோதிக்கும் நேரத்தை 15 நிமிடங்களாக உயர்த்தி, தீர்மானமும் போட்டுவிட்டது இங்கிலாந்துமருத்துவ சங்கம்.
ஆனால், இந்த மருத்துவ சங்கத்தின் தலைவர் என்ற லெவலில் உள்ள ஒருவர் கூறுகையில், இப்படி ஒவ்வொருநோயாளிக்கும் 15 நிமிடங்களை ஒதுக்கினால், இன்னும் ஒரு 10,000 டாக்டர்களாவது கட்டாயம் தேவைப்படும்என்று அவர் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications