பாத்திமா பீவி .. சில பின்னணித் தகவல்கள்
சென்னை:
தமிழக மக்களை ஆண்டவன் காப்பாற்றட்டும் என்ற வேண்டுதலுடன் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திருவனந்தபுரம்கிளம்பிச் சென்றார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பு மிகச் சிறந்த பெயரைவைத்திருந்தவர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த அவர் சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். கேரள மாநிலத்தில்நீதிபதியாகப் பணியாற்ற பின் பெருமை மிகுந்த சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக உயர்ந்தார்.
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் இருந்துள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக ஆளுநராக புதியவர்நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் பாத்திமா பீவிஆளுநராக நியமிக்கப்பட்டார்.
துவக்கத்தில் கருணாநிதிக்கும் அவருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தின்இறுதி ஆண்டுகளில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இரண்டு விஷயங்களில் உரசல் எழுந்தது. ஒன்று, சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் புதிய பிரிவைத் துவக்கியதற்கு ஆளுநர் போட்ட தடை, இரண்டு, மதுரை காமராஜர்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தி.
சென்னைப் பல்கலைக்கழகம் தனது செனட் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின் ஒரு பிரிவை தமிழ்த்துறையில் துவக்கியது. ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் அதை எப்படித் துவக்கலாம் என்று கூறி அப்பிரிவுக்குத் தடைபோட்டு விட்டார் பாத்திமா பீவி. இது தமிழக அரசுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல பல தமிழறிஞர்களும்கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைழகத் துணைவேந்தராக சாலிஹு என்பவர் நியமிக்கப்பட்டபோது பல்கலைக்கழகத்தில் கடும் எதிர்ப்புஎழுந்தது. சாலிஹு திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.
மதுரை பல்கலைக்கழகத்திற்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை எப்படி துணைவேந்தராக நியமிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தில்கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு பரிந்துரைத்த நபர்களையும் ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த இரண்டு விஷயத்திலும் கருணாநிதி அரசுக்கும், பாத்திமா பீவிக்கும் இடையே உரசல் எழுந்தது. மேலும், தன்னைமொழிவெறியர் என்று சித்தரிக்க தமிழக அரசு முயன்றதோ என்ற சந்தேகம் அவருக்கு வலுத்தது. இத்தனை விஷயங்களும்சேர்ந்துதான், ஜெயலலிதா அரசு கருணாநதி மீதும் மத்திய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தபோது பேசாமல் இருந்துவிட்டார் பாத்திமா என்று விவரம் அறிந்தவர்கள் கருதுகிறார்கள்.
எப்படியோ, நல்ல நீதிபதி என்று போற்றப்பட்ட ஒருவர் கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டுதிரும்பிச் செல்வதைப் பார்த்த அனைவருக்கும் வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications