அடுத்த ஆளுநர் யார்?
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சமீபத்தில் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.அவருடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆளுநர் பாத்திமா பீவி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு மாநில ஆளுநரிடமிருந்து அறிக்கை கோரியது.அவரும் அனுப்பி வைத்தார். ஆனால் அதில் திருப்தியடையாத மத்திய அமைச்சரவை ஆளுநரின் கடமைையிலிருந்து பாத்திமாபீவி தவறியதாகக் கூறி அவரை டிஸ்மிஸ் செய்தது.
தமிழகத்தின் தற்போதைய ஆளுநராக தற்காலிகப் பொறுப்பில் ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் புதிய ஆளுநர் நியமனம் குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
தீவிர பாரதீய ஜனதாக் கட்சி பிரமுகர்தான் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. புதிய ஆளுநர்மூலம் பல பலன்களை அடைய நினைக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி.
மாநிலத்தின் ஆட்சி லகானை தனது கையில் வைத்துக் கொள்ளவும், ஜெயலலிதாவின் அதிகாரங்களை கண்காணித்து வருவதோடுஅவரது செயல்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதிப்பது, தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியை மேலும் பலமுடையதாக மாற்றுவது எனபல காய்களை நகர்த்தப் பார்க்கிறது பா.ஜ.க.
அந்த வகையில் பா.ஜ.கவின் உறுதியான தலைவர்களில் ஒருவரான பைரான்சிங் செகாவத்தை ஆளுநராக்க தீவிர ஆலோசனைநடப்பதாகத் தெரிகிறது. ராஜஸ்தானின் அசைக்க முடியாத பா.ஜ.க. தலைவராக இருப்பவர் பைரான்சிங் செகாவத். முந்தையஜெயலலிதாஆட்சியின்போது நியமிக்கப்பட்ட சென்னா ரெட்டி போல சிக்கலான ஆள்தான் இந்த செகாவத்.
இவர் தவிர இன்னொரு பெயரும்அடிபடுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரான சிக்கந்தர் பக்த்தான் அவர்.
பாத்திமா பீவியின் நீக்கத்தால் முஸ்லிம் மக்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர்நினைக்கின்றனர். எனவே அதை சரி செய்ய சிக்கந்தர் பக்த்தை நியமிக்கலாம் என்று ஒரு பேச்சு உள்ளது. இருப்பினும், தீவிரஅரசியலில் உள்ள பக்த், ஆளுநர் பதவியில் அமர யோசிப்பார் என்று கூறப்படுகிறது.
இவர்கள் இருவர் தவிர மேலும் சிலரின் பெயர்களும் ஆளுநர் பதவிக்கு அடிபடுகிறது. யாராக இருந்தாலும் அவர் நிச்சயம்ஜெயலலிதாவுக்குத் தலைவலியாக இருப்பார் என்பது மட்டும் உறுதி.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications