ஜெ. மனுவை நிராகரித்த ஜெயா அதிரடி மாற்றம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி ஜெயா திடீர் மாற்றம்செய்யப்பட்டார். அவருக்குப் பதில் புலமாடன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அதிகாரியான ஜெயாதான் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆண்டிப்பட்டி தொகுதிதேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றினார். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில்போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருந்ததால் அவரது மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்துஜெயா மற்றும் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அவர்களுக்குத் தீவிரபாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதாவும்முதல்வராகி விட்டார். தற்போது அவர் 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். இந்தச்சூழ்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த ஜெயாவை இடமாற்றம் செய்துள்ளது அரசு. அவருக்கு வேறுபணி எதுவும் கொடுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். ஜெயா இடத்தில் புலமாடன் என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடலாம் என்று கருதப்படுவதால் அவர் போட்டியிட எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெயா இருந்தால் மீண்டும் வேட்பு மனுவைதள்ளுபடி செய்யலாம் என்று அதிமுக தரப்பில் கருதப்பட்டது. இதையடுத்தே அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications