வாஜ்பாய்-அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அரசிடம் விளக்குவதற்காக அதிமுக எம்.பிக்கள் குழுவியாழக்கிழமை டெல்லி சென்றது.
இக்குழு பிரதமர் வாஜ்பாயை சந்தித்து, கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவத்தை விளக்கியது.
மனித உரிமை மீறல்:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்துமத்திய அரசு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியது.
அதிமுக எம்.பிக்கள் டெல்லி பயணம்:
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தம்பிதுரை, பொன்னையன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் டெல்லிசென்றனர்.
15 பேர் கொண்ட இக்குழுவில் அதிமுக எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் டெல்லியில் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் மற்றும் தலைவர்களை நேரில் சந்தித்து கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவாக விளக்கினர்.
வாஜ்பாயை சந்தித்தனர்:
இதையடுத்து பிரதமர் வாஜ்பாயையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து விளக்கினர்.
கருணாநிதியைப் போலீஸார் கைது செய்தபோது அத்துமீறி நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவின் கேசட்ஒன்றையும் அவர்கள் பிரதமரிடம் கொடுத்தனர். இதுதொடர்பான விளக்கமனுவும் பிரதமரிடம் சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினோம். முரசொலி மாறன்,டி.ஆர்.பாலு ஆகியோர் நடந்து கொண்ட விதம் பற்றியும் எடுத்துக் கூறினோம்.
மத்திய அரசு, தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை ஆய்வு செய்த பிறகு இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாமத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவார்.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தமாகா, வ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தொடர்ந்து இருக்கும் என்றார்.
சோனியாவை சந்தித்தனர்:
அதிமுகவினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில்ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்குஜெயலலிதா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவினர் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், வ.கம்யூனிஸ்ட்தலைவர் ஏ.பி.பரதன், இ.கம்யூனிஸ்ட் பிரமுகர் சீதாராம் யச்சூரி ஆகியோரையும் சந்தித்து விளக்கம் அளித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அதிமுக குழுவில் அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை மற்றும் பி.எச்.பாண்டியன், மலைச்சாமி,டிடிவி.தினகரன், திண்டுக்கல் சீனிவாசன், குமாரசாமி, கே.கே.காளியப்பன், சரோஜா, தலித் எழில்மலை,எஸ்.முருகேசன், எம்.சின்னசாமி, செல்வகணபதி, மார்க்கபந்து, ஓ.எஸ்.மணியன், நிறைகுளத்தான், பி.சவுந்தர்ராஜன்ஆகிய எம்.பிக்கள் இடம்பெற்றிருந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications