இந்தியர்களைக் கொன்ற அமெரிக்கர்களுக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

நியூஜெர்ஸியின் வசித்து வந்த 3 இந்தியர்களைக் கொலை செய்த 3 அமெரிக்க வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வைர வியாபாரியான ராஜேஷ் கல்சாரியா மற்றும் அவரது நண்பர்கள்அஜித் ஹிரா, பூஷண் ராவல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

நியூஜெர்சியில் உள்ள போகோடாவில் செஸ்ட்நட் அவென்யூவில் உள்ள கலாசாரியாவின் வீட்டில் இந்தக் கொலைநடந்தது.

கொலையைத் தூண்டிய இந்தியர்:

இவர்களைக் கொல்ல மற்றொரு இந்தியரான டிம்பி படேல் என்பவர் தான் திட்டம் போட்டார். டார்வின் கோடோய்(23), மிகெல் சுவாரெஸ், ரிச்சர்ட் மோரெல்ஸ் ஆகியோரை கூலிக்கு அமர்த்தினார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 3இந்தியர்களையும் கொலை செய்தனர்.

இது குறித்து அரசு வக்கீல் ஜேம்ஸ் சாண்டுலி கூறுகையில், ராஜேஷ் கல்சாரியா, அஜித், பூஷண் மூவரையும் இந்தகொலையாளிகள் மூன்று பேரும் முதலில் கட்டிப் போட்டனர். கண்களையும் கட்டியுள்ளனர்.

பின்னர் டார்வின் கோடோய் வீட்டின் வெளியே யாரும் வருகிறார்களா என்று கவனித்துக் கொள்வதற்காக வீட்டின்வாசலில் நின்று கொண்டார். மிகெலும் ரிச்சர்டும் துப்பாக்கியால் 3 பேரையும் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலைசெய்தனர்.

கொலை நடந்த மறுதினமே படேல் உள்பட கொலையாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

இந்த விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. தீர்ப்பில், டார்வினுக்கு 3 ஆயுள் தண்டனைகள்விதிக்கப்பட்டுள்ளன. அவர் பரோலில் கூட வெளியே வர முடியாது. மிக்கெலுக்கு ஆயுள் தண்டனையும்ரிச்சர்ட்டுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொலையைத் தூண்டி கூலிக்கு ஆட்களை அமர்த்திய படேல் மீதான விசாராணை செப்டம்பர் 20ம் தேதி தொடங்கஉள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜோசப் எஸ். கோண்ட் இந்தத் தீர்ப்பை வழங்கியபோது கெலைை செய்யப்பட்ட ராவலின்மனைவி மம்தாவும் ஹிராவின் மனைவி நீருவும் நீதிமன்றத்தில் இருந்தனர். அவர்கள் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சிதெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+