தாக்குதல்கள்...கைதுகள்: ஆளுனரிடம் நிருபர்கள் மனு
சென்னை:
சன் டிவி நிருபர் சுரேஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிடக் கோரி ஆளுனர்சி.ரங்கராஜனிடம் பத்திரிக்கையாளர்கள் போராட்டக் குழு மனு கொடுத்துள்ளது.
புழுத்த அரிசி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் விழுப்புரம் உணவுக் கிடங்குக்குள்அத்துமீறி நுழைந்ததாகக் கூறி சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரங்கராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்த போராட்டக் குழு ஒரு மனுவைக் கொடுத்தது. அதில்,
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.நிருபர்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏதிர்த்துப் போராட்டம் நடத்தினாலும்தாக்குதல் நடக்கிறது.
பத்திரிக்கைகள் தங்களது சமூகக் கடமையை ஆற்ற முடியாத அளவுக்கு நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
சுரேஷ் ஜூன் 26ம் தேதி கைதானார். இதை எதிர்த்துப் போராடிய 150 நிருபர்களும் பத்திரிக்கை ஆசிரியர்களும்சென்னையில் கைது செய்யப்பட்டனர். அதே போல சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நள்ளிரவில் உட்காரவைக்கப்பட்டிருந்த கருணாநிதியை சந்திக்க முயன்ற 12 நிருபர்களும் கைது செய்யப்பட்டனர். மதுரை சிறையில்ஸ்டாலின் அடைக்கப்பட்டதை செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள், நிருபர்கள் மீதான அடக்குமுறைகளில் ஈடுபட்டவர்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு பத்திரிக்கையாளர்களின் போராட்டக் குழு கவர்னரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதைப் படித்துப் பார்த்த ஆளுனர் ரங்கராஜன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பத்திரிக்கையாளர்களிடம்உறுதிமொழி அளித்தார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications