கம்ப்யூட்டர் படிப்புக்கு மவுசு குறைந்தது
சென்னை:
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில், இந்த ஆண்டு கம்ப்யூட்டர் படிப்புக்கான மவுசு மாணவர்களிடையேகுறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மாணவர்கள் காட்டிய ஆர்வம் கூட இந்த ஆண்டு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. சென்றஆண்டு வரை, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் துடியாகத் துடித்தனர்.
சென்ற ஆண்டுகளில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் மலை போலக் குவிந்து கிடக்குமாம்.ஆனால் இந்த ஆண்டு இந்தப் படிப்பை மாணவ-மாணவிகள் சீண்டக் கூடவில்லை.
என்ன காரணமாம்? கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு கிடைப்பதில்லைஎன்பதுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படிப்பில் பழைய பாடத்திட்டங்கள்தான்இன்னும் இருக்கின்றனவாம்.
தவிர, தற்போதெல்லாம் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புக்குத்தான் மவுசு கூடிவிட்டதாகமாணவ-மாணவிகள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் படிப்பில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட்பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப் போனால், கம்ப்யூட்டரையே மெயின் பாடமாகப் படித்து, 4 ஆண்டுகளை வீணடிக்கமாணவ-மாணவிகள் விரும்பவில்லை. வேறு ஒரு பாடத்தை மெயினாக எடுத்துப் படித்து, பிரைவேட்டாகவேகம்ப்யூட்டர் படித்தால் போதும் என்றும் அவர்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த பல ஆயிரக்கணக்கான பேரும், கடந்த 4 மாதங்களாக அமெரிக்காவில்விரட்டப் பட்டுக் கொண்டிருப்பதும், இந்த மாணவ-மாணவிகளின் வயிற்றைக் கலக்கியிருக்கக் கூடும். இந்தியாவில்கூட, ஏகப்பட்ட சாப்ட்வேர் கம்பெனிகள் மூடுவிழாவுக்குத் தயாராகி வருவதும் இவர்களுக்குத் தெரியாமல்இருந்திருக்காது.
சனிக்கிழமை தொடங்கிய இன்ஜினியரிங் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் போது, இந்தக் காட்சியை அப்பட்டமாகப்பார்க்க முடிந்தது. நுழைவுத் தேர்வில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவர்கள் கூட கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்படிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை.
எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடத்தைத்தான் அவர்கள் விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து,தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரையிடமிருந்து அதற்கான அத்தாட்சிக் கடிதத்தைக் கூட பெற்று விட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications