இந்தியாவிடமிருந்து போர் விமானம் வாங்குகிறது இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
இந்தியாவிடமிருந்து ஆளில்லா போர் விமானம் ஒன்றை இஸ்ரேல் வாங்குகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை2 நாடுகளுக்குமிடையே நடந்து வருகிறது.
இந்தியாவின் ஆளில்லாமல் பறந்து இலக்கைத் தாக்கும் போர் விமானமான "லக்ஷ்யா"வை வாங்குவதில் இஸ்ரேல்மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
"போர் ஆயுதம் ஒன்றை இந்தியாவுக்கு விற்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்தப் போர்விமானத்தை நிச்சயம் இந்தியாவிடமிருந்து வாங்குவோம்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய பாதுகாப்புத் துறைச் செயலாளரும் கடற்படைத் தளபதியும் சமீபத்தில் இஸ்ரேல் சென்றனர். அப்போதுஇதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் தவிர, வேறு சில நாடுகளும் "லக்ஷ்யா"வை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்றும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications