தமிழர் விடுதலை படை தலைவரின் கூட்டாளி கைது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தவைவர் மாறனின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் மாறன். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் திட்டத்தில்முக்கியப் பங்கு வகித்தவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, வீரப்பனுடன் இவர் இருந்து வந்தார்.
ராஜ்குமார் விடுதலைக்குப் பின்னர், வீரப்பனைத் தேடி வந்த அதிரடிப்படையினாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில்உள்ளது வரக்கால்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் சந்தேகப்படத்தக்க வகையில் ஒரு நபர் தங்கியிருப்பதாகபோலீசாருகுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்தின் எல்லையில்பதுங்கியிருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவர் பெயர் கவுரி சங்கர். அவரை சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து டைரி ஒன்றை கைப்பற்றினர்.அதில் அதிரடிப்படை தலைவர் தேவாரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், நடிகைவிஜயசாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இவரை விசாரித்த போது, அவர் தமிழர் விடுதலை படை தலைவர் மாறனின் கூட்டாளியான ரமேஷ் என்பவரைச்சந்திக்க வந்தது தெரியவந்தது.
இவரை போலீசார் உளவுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications