குஜராத் பூகம்ப உதவி: புறக்கணிக்கப்படும் ஏழைகள்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் உதவிகள் வழங்கப்பட்டதில் ஏழை மக்களும், சிறுபான்மையினரும்பாரபட்சமாக நடத்தப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி, குஜராத் மாநிலத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 25,000 பேர் வரைஉயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தனர்.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், மீட்புபணியில் ஏழை மக்களையும், சிறுபான்மையினரையும் அரசு பாரபட்சமாக நடத்தியுள்ளதாக அகமதாபாத்தில்இருக்கும் ஆய்வு நிறுவனம் ஒன்றும் டெல்லியில் இருக்கும் ஆய்வு நிறுவனம் ஒன்றும் தெரிவித்துள்ளன.
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூஜ், பாச்சான், ரபார் மற்றும் அஞ்ஜார் பகுதிகளில் உள்ள 30கிராமங்களில், 613 வீடுகளை தேர்ந்தெடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது மக்கள் கூறியதாவது:
பணக்காரர்கள்தான் அதிகமான நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர். எங்களுக்கு கிடைத்த உதவியும்போதுமானதாக இல்லை. எங்களுக்கு கிடைத்த பாதிக்கும் மேற்பட்ட உதவிகள் என்.ஜி.ஓ. என்றழைக்கப்படும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்துதான் கிடைத்தன.
அரசு பூஜ் பகுதியில்தான் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் அங்கு ஏழை மக்களின் எண்ணிக்கை குறைவு. ரபார்,பாச்சான், அஞ்ஜார் பகுதிகளில் இருந்த ஏழை மக்களுக்கும், சிறுபான்மை இனத்தவருக்கும் அரசு எந்த விதமானஉதவியும் செய்யவில்லை என்று அந்த மக்கள் கூறினர்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள் மிகவும் குறைவு. அவையும் மிக தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது என40 சதவித மக்கள் தெரிவித்தனர்.
தொண்டு நிறுவனங்கள்தான் சிறுபான்மையினருக்கு நிறைய உதவி செய்தன. அஞ்ஜாரில் பாதிக்கப்பட்டமக்களுக்கு செய்யப்பட்ட உதவியில் 65-80 சதவிகித உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான்செய்துள்ளன. அதே போல் ராபாரிலும் 18 சதவிகித மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் உதவிஉள்ளன என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ள்ளது.
இது குறித்து சமூக அமைப்பைச் சேர்ந்த ஃபாதர் பிரகாஷ் கூறுகையில், ஒரு சில மதத்தில் பிறந்தவர்கள் என்றகாரணத்திற்காக அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய உதவிகள் மறுக்கப்பட்டால் அது விரோதத்தைதான்வளர்க்கும். அந்த விரோதம் சில சமயம் தீவிரவாதத்திற்கு வழி வகுக்கும. அது போன்ற பல சம்பவங்கள் நம்நாட்டில் நடந்துள்ளன என்றார்.
லோக் அதிகார் மான்ச் (மக்கள் உரிமை கழக தலைவர்) தலைவர் கிரீஷ் படேல் கூறுகையில், இந்த இயற்கை சீற்றம்ஏழை-பணக்கார மக்களிடையே இருக்கும் இடைவெளியை போக்கும் என நினைத்தோம். ஆனால் இதுஇடைவெளியை இன்னும் அதிகப்படுத்தி விட்டது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications