முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல்: முன் ஜாமீன் கேட்கிறார் மாஜி டி.ஜி.பி
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக சிறையிலுள்ள முஸ்லீம் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில்தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஷர்மா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்செய்துள்ளார்.
1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கோயம்புத்தூருக்கு வந்தபோது, அங்குதொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள்பலரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்
சிறையில் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி,முன்னாள் டி.ஜி.பி. ஷர்மா உள்ளிட்டோர் மீது ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், "முஸ்லீம்கைதிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தபோது, நான் சிறைத்துறைஅதிகாரியாக இல்லை. எனக்கும் முஸ்லிம் கைதிகள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும்கிடையாது. எனவே தனக்கு முன் ஜாமீன் தர வேண்டும்" எனக் கூறி மனுத் தாக்கல் செய்துள்ளார் ஷர்மா.
ஷர்மாவின் வழக்கறிஞர் கூறுகையில், ப்ரீத்தி பாஸ்கர் தொடர்ந்த வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் இருப்பதால்,கீழ் நீதிமன்றம் ப்ரீத்தி பாஸ்கரின் புகாரை ஏற்று விசாரிக்கக் கூடாது. இதனால், ஷர்மாவுக்கு முன் ஜாமீன்வழங்கப்பட வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications