இம்மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு ஆரம்பத்தில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ஆரம்பமாகும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து செவ்வாய்க்கிழமை கூறினார்.
தமிழகத்தில் வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபைக்கான தேர்தலுக்கான தேர்தல்அதிகாரியாக, தமிழகத் தலைமை தேர்தல் கமிஷனர் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலைசாரங்கிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துவிட்டு, காளிமுத்து நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது:
இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் துவக்கத்திலோ தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ஆரம்பமாகும்.
இக்கூட்டத் தொடரின்போது, தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
செப்டம்பர் 9ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நீடிக்கலாம் என்று காளிமுத்து கூறினார்.












Click it and Unblock the Notifications