இலங்கை: 22 தமிழக மீனவர்கள் விடுதலை
கொழும்பு:
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததற்காக கைது செய்ப்பட்ட 22 தமிழக மீனவர்களைபுதன்கிழமை விடுதலை செய்ய உள்ளது இலங்கை அரசு.
இலங்கை கடற் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கடந்த ஏப்ரல் மாதம்முதல் ஜுன் மாதம் வரை 66 இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைதுசெய்தனர். அவர்களது மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர்
இவர்களில் 22 பேரை புதன்கிழமை விடுதலை செய்வதாக இலங்கை அரசுஅறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழக மீனவர்கள்.
இவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்தனர்.இவர்கள் கைது தொடர்பான ஆவணங்கள் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த ஆவணங்கள் அங்கிருநத் குறித்த நேரத்திற்கு வராதது தான் இவர்கள் விடுதலைதாமதமாவதற்கு காரணம் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் சிறைக்கு சென்று மீனவர்களின் நலம் குறித்துவிசாரித்து அறிந்தனர்.
இந்தியமீனவர்கள் 66 பேர் இலங்கை கடற்பகுதியில் அத்து மீறி நுழைந்தததாக கைதுசெய்யப்பட்டது போல் இந்திய கடற்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாக 73 இலங்கைமீனவர்களும் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications