மாநகராட்சி கூட்டம்: ஸ்டாலினை ஒதுக்கும் தமிழக அரசு
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டம் புதன்கிழமை கூட்டப் பட்டிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனசென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் 10வது மேம்பாலத்தை பார்வையிட்ட பின்னர், ஸ்டாலின்செய்தியாளர்களிடம் கூறும்போது:
புதன்கிழமை (ஜூலை 11) சென்னை மாநகராட்சியின் கூட்டம் கூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், சென்னை மேயரான எனக்கு இது பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில், வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னையில் இருக்கும்வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்தும், அந்த வாக்குச் சாவடிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதாஎன்பது குறித்தும் அறிக்கை தருமாறு கூறப்பட்டிருந்தது.
அந்த அரசு ஆணையை திங்கள்கிழமை மாலை என் பார்வைக்கு கொண்டு வந்த மாநகராட்சி கமிஷனர், அதில்கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொண்டார். நான் அந்த அரசு ஆணையைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துபோட்டேன்.
இது அவசரமான விஷயம் என்பதால், இது குறித்து விவாதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தை இந்த மாதம் 11ம்தேதி கூட்ட உள்ளேன். இந்நிலையில், தமிழக அரசு சார்பாகவும் புதன்கிழமை மாநகராட்சி கூட்டம் கூட்டப்படஇருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் பல உயர் அதிகாரிகளும் இடம் மாற்றப்பட்டிருப்பதால் மாநகராட்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications