முஷாரப்பைக் கொல்ல முயற்சி?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பைக் கொல்ல செவ்வாய்க்கிழமை நடந்த சதி முறியடிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு முஷாரப் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடைய காருக்கு முன்பும்பின்பும், மெய்க்காவல் படையினரின் கார்களும் சென்று கொண்டிருந்தன.
விமான நிலையத்தை நெருங்குவதற்கு முன், அருகிலிருந்த சாலையிலிருந்து வேறொரு மர்மக் கார் திடீரெனதோன்றியது. பின்னர் அது படு வேகமாக முஷாரப்பின் காரை நோக்கிச் சென்றது.
ஆனால், அதற்குள் முஷாரப் காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மெய்க்காப்பாளரின் கார் இடையில்புகுந்ததால், அந்த 2 கார்களும் மோதிக் கொண்டன.
இந்த மோதலில், மெய்க்காப்பாளரின் காரிலிருந்த மெய்க்காப்பாளரும் டிரைவரும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் காரணமாக, அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்தும்உடனடியாக நிறுத்தப்பட்டது.
முஷாரப்பின் கார் மீது மோதுவதற்காக வந்த மர்மக் காரை ஓட்டி வந்தவரைக் கைது செய்து, விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications