வி.ஏ.ஓ. அதிகாரிகளுக்கு கிராமத்திலேயேவீடு: அரசு பரிசீலனை
சென்னை:
கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு (வி.ஏ.ஓ.) கிராமத்திலேயே வீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனைசெய்து வருகிறது.
தமிழக அரசின் வருவாய்த்துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய வருவாய்த்துறை செயலாளர் சாரங்கி கூறுகையில், பெரும்பாலான கிராம நிர்வாகிகள்தங்கள் பகுதிக்கு செல்வதில்லை. நகரங்களில் அலுவலகம் வைத்துக் கொண்டு பொதுமக்களைஅலைக்கழிக்கின்றனர். வி.ஏ.ஓக்களிம் சான்றிதழ்களில் கையெழுத்து பெற மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்என்றார்.
இந்த பிரச்சனைக்கு எந்த விதமான தீர்வு காண்பது என்பது குறித்தும், மக்கள் எளிதில் சான்றிதழ்கள் பெறுவதற்கானவழிமுறைகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, வி.ஏ.ஓக்களுக்குஅந்தந்த கிராமத்திலேயே வீடு மற்றும் அலுவலகம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி வி.ஏ.ஓக்கள் வாரத்திற்கு 2 நாட்களாவது கிராமத்திலேயே தங்கியிருக்கும் வகையில் உத்தரவிட ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு வீடு மற்றும் அலுவலகம் வழங்குவதால்ஆகும் செலவு பற்றி மதிப்பீடு செய்யும்படியும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வி.ஏ.ஓக்களுக்கு இந்த சலுகையை செய்து கொடுத்தால், தமிழக அரசுக்கு அதிக அளவில்செலவாகும் என்பதால், இதை எந்த விதத்தில் ஈடுகட்டுவது என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர்.
வி.ஏ.ஓக்களிடம் பணம் கொடுக்காமல் பொதுமக்கள் சான்றிதழ் வழங்வும், தாசில்தார் அலுவலகங்களில் மிகசுலபமான முறையில் உடனடியாக சான்றிதழ்கள் பெறவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இது பற்றிய அறிவிப்புகள் தமிழக அரசின் பட்ஜெட் உரையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications