இந்திய எல்லையிலேயே விசா வழங்க புதிய ஏற்பாடு
டெல்லி:
இந்தியாவிற்கு வர விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு எல்லைப் பகுதிகளில் உள்ள செக் போஸ்ட்டுகள் மூலமாகவேவிசா வழங்குவதற்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காஷ்மீர்குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பேச்சுவார்த்தைக்கு இவர்கள் 2 பேரும் அடித்தளமிட்ட நாளிலிருந்தே, 2நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு துளிர் விடத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வர விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு எளிதில் விசா கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்தியா சிந்தித்து வந்தது. தற்போது, அது நடைமுறைக்கு வந்துவிட்டது. பேச்சுவார்த்தைநடைபெறுவதை முன்னிட்டே, எளிதில் விசா வழங்கும் இந்தத் திட்டத்தை பிரதமர் வாஜ்பாய் அறிவித்திருப்பதாகத்தெரிகிறது.
முதற்கட்டமாக, தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. 2 நாடுகளுக்கும்இடையேயான இந்த சர்வதேச எல்லைக் கோட்டில் பல செக் போஸ்ட்டுகள் உள்ளன.
தற்போது, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில்தான் இந்தியாவுக்குச் செல்வதற்கான விசாக்கள்வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாள்தோறும் 350 விசாக்கள் வரை, இங்குள்ள இந்தியத் தூதரகத்தில்வழங்கப்படுகின்றன.
இந்தியாவிற்கு வர விரும்பும் பாகிஸ்தானியர்கள், இனி இஸ்லாமாபாத்துக்குத் சென்றுதான் விசா வாங்க வேண்டும்என்ற அவசியம் இல்லை. இந்த செக் போஸ்ட்டுகளிலேயே விசா கிடைக்கும். "எல்லைப் பகுதிக்கு வந்தோமா,விசாவை வாங்கி இந்தியாவுக்குச் சென்றோமா" என்று அவர்கள் எளிதாக இனி இந்தியாவுக்குள் வர முடியும்.
இந்த வசதிக்காக, மேலும் பல செக் போஸ்ட்டுகள் எல்லைப் பகுதிகளில் திறக்கப்பட உள்ளன. ஆனாலும், இந்தவசதி முழு நடைமுறைக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்கூறுகிறது.
பாகிஸ்தான் செல்லவிருக்கும் இந்தியர்களுக்கும் இதேபோல் "செக் போஸ்ட்டில் விசா வழங்கும் திட்ட"த்தைப்பாகிஸ்தான் அறிமுகப்படுத்துமா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications