அமெரிக்காவில் சின்மயா மிஷனின் அமைதிப் பேரணி
நியூயார்க்:
சின்மயா மிஷன் சார்பில் நடந்த அமைதிப் பேரணியில் பங்கேற்ற நியூஜெர்சியை சேர்ந்த ஃப்ராங்க் பாலோன் உலகமதங்களிலேயே இந்து மதம்தான் அமைதியை அளிக்கும் மதம் என கூறியுள்ளார்.
மிஸ்டர் இந்தியா என்று அழைக்கப்படும் பாலோன், சின்மயா மிஷன் நடத்திய அமைதிப் பேரணிக்கு பின்இந்தியர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களிடேயே பேசுகையில், உலகில் உள்ள மதங்களிலேயேஅமைதியை அளிக்கும் மதம் இந்து மதம்தான் என புகழ்ந்து கூறினார்.
இந்த அமைதிப் பேரணியில் குறைந்த பட்சம் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என அமைதிப் பேரணியை ஏற்பாடுசெய்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அமைதிப் பேரணிக்கு நியூஜெர்சி போலீசார் வழங்கிய பாதுகாப்பைப் பாராட்டி அவர்களுக்கு குண்டு துளைக்காதசட்டையை வழங்கியது சின்மயா மிஷன்.
பகவத் கீதா உபன்யாசம் ராரிடன் எக்ஸ்போ மையத்தில் பிற்பகலில் நடைபெற்றது. இதில் 2,000 பேர் கலந்துகொண்டனர். பகவத் கீதா உபன்யாசத்தை சின்மயா மிஷன் தலைவர் ஸ்வாமி தேஜோமயானந்தா நிகழ்த்தினார்.
ஸ்வாமி தேஜோமயானந்தாவுடன் கீதா உபன்யாசர் ஸ்ரீ ரமேஷ்பாய் ஓஷா. ஸ்வாமி சித்தானந்தா முனிஜி ஆகியோர்பங்கேற்றனர். உபன்யாசத்திற்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் லலித் மான்சிங்கும் பங்கேற்றார்.
கோடீஸ்வரர் எஸ்.பி. இந்துஜா இங்கு வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, அவர் பின்சத்யநாராயணா கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அவர் தனது அமெரிக்க விஜயத்திற்கான காரணத்தை கூறமறுத்துவிட்டார்.
சின்மயா மிஷனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. ஆண்டுவிழாகெண்டாட்டங்கள் சனிக்கிழமை வரை நடைபெறும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications