குழப்பமே உன் பெயர் த.மா.காவா?
சென்னை:
வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலில் தமாகா சார்பாக யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது பற்றி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் தமாகா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெரியவரும்.
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா எம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய எம்.பிக்களைத்தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில், அதிமுக கூட்டணிக்கு ஒதுங்கியுள்ள 5 சீட்டுகளில், 4 சீட்டுகள்அதிமுகவுக்கும் ஒரு சீட் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டன. எஞ்சியுள்ள ஒரு திமுக சீட் மூலம் நடிகர் சரத்குமார்போட்டியிடுகிறார்.
கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள், மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனுக்குத்தான் ராஜ்ய சபா சீட்டைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, தமாகாவில் ஏற்பட்ட கோஷ்டிப்பூசலுக்குத் தீர்வு கண்ட பெருமை கோவிந்தவாசனையே சேரும் என்பதால், அவருக்குத்தான் இந்த சீட்டைக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், தன் மகன் தீவிர அரசியலுக்கு வருவதை மூப்பனார் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போதுதமாகா சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ஜெயந்தி நடராஜனே மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள்இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஜெயந்தி நடராஜனுக்கு இந்தப் பதவி போய்விடக் கூடாது என்பதற்காகவே கோவிந்தவாசனைஎம்.பியாக்க பல த.மா.கா. பெருந்தலைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், த.மா.காவின் எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை அவசரமாகக் கூடுகிறது. ஏனென்றால்வெள்ளிக்கிழமைக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே, ஏதாவது ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமாகா உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications