சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் ரூ.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், செல்போன்கள்கைப்பற்றப்பட்டன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அந்த விமானம் சென்னை வந்து கொண்டிருந்தபோதே சுங்கத்துறைஅலுவலகத்துக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. சிங்கப்பூரில் இருந்து வரும் அந்த விமானத்தில் தங்கக் கட்டிகள்கடத்தப்பட்டுக் கொண்டு வரப்படுவதாக செய்தி வந்தது.
ஆனால் யாரிடமும் தங்கக் கட்டிகள் சிக்கவில்லை.
இந் நிலையில் விமானத்தின் சரக்கு அறையில் ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதில் அரசு முத்திரையும் தூதரகத்தின்முத்திரையும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியை யாரும் சொந்தம் கொண்டாடவும் இல்லை.
இதையடுத்து பெட்டியை உடைத்துப் பார்க்க அதிகாரிகள் திட்டமிட்டு பூட்டுகளை உடைத்துத் திறந்தனர்.
உள்ளே 12 பைகள் இருந்தன. பைகளில் 935 தங்கக் கட்டிகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 120 கிலோ.தங்கக் கட்டிகளின் கீழே 1,500 கம்யூட்டர் சிப்களும் 150 செல்போன்களும் இருந்தன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5 கோடியே 20 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.
தூதரகங்களின் முத்திரைகளுடன் வரும் பெட்டிகள் உடமைகள் பொதுவாக சோதனையிடப்படுவது இல்லை.இதைத் தெரிந்த வைத்துள்ள கடத்தல் கும்பல் தான் தூதரக முத்திரையுடன் இந்த தங்கக் கட்டிகளை அனுப்பிவைத்ததாகத் தெரிகிறது.
கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குறித்து சிங்கப்பூரிலும் சென்னையிலும் விசாரணை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications