தமிழகப் போலீசாருக்கு சன் டி.வி. கண்டனம்
சென்னை:
தங்கள் ஒளிபரப்பில் தலையிடுவதற்கு போலீஸாருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று சன் டி.வி.தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மற்ற இந்தியச் சேனல்களைப் போலவே மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நாங்களும் அனுமதிபெற்றுத்தான் நாங்கள் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கிறோம். இதில் மாநில அரசு எந்த விதத்திலும்தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது.
கடந்த ஜூன் 30ம் தேதி அதிகாலை, முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலீசார் கைது செய்யச் சென்றபோது,போலீஸ் வீடியோ குழுவினர்தான் முதலில் சென்றிருந்தனர். அதற்கு அப்புறம், நீண்ட நேரம் கழித்தே எங்கள்குழுவினர் அங்கு சென்றனர்.
கைது சம்பவத்தின் இடையில்தான், எங்கள் குழுவினர் படம் பிடிக்க ஆரம்பித்தனர். எங்கள் ஊழியர்கள்படமாக்கிய அனைத்தையும் நாங்கள் ஒளிபரப்பி விட்டோம். அதை நாங்கள் எந்த இடத்திலும் எடிட் செய்யவேஇல்லை.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற எந்தவொரு நிபுணரிடமும் நாங்கள் எங்கள் வீடியோ கேசட்டை, சோதனைக்காகத்தருவதற்குத் தயாராக இருக்கிறோம். அதேபோல, போலீசாரும் தங்கள் கேசட்டைக் கொடுக்க வேண்டும்.
சன் டி.வியின் கேமிரா லென்சைப் போலீசார் மறைத்துக் கொண்டிருப்பதை, ஒளிபரப்பில்கூட அனைவரும்தெளிவாகப் பார்த்திருப்பார்கள்.
தகவல் தொடர்பு சாதனம் என்ற அளவில், நாங்கள் எங்கள் டி.வியைப் பார்ப்பவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.செய்தியைச் சேகரித்து அப்படியே வழங்குவது எங்கள் கடமை. அதைத்தான் அன்றும் நாங்கள் செய்தோம்.
எனவே தொழில் முறையில் நிர்வகிக்கப்படும் எங்கள் செய்தி நிறுவனத்தின் மீது பொய்யையும் புரளியையும்பரப்புவதை மாநில அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications