For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியுடன் பிரதமர் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் ஆக்ராவில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பிரதமர் வாஜ்பாய்ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. பாகிஸ்தான் அதிபருடன் தான்நடத்தப் போகும் விஷயங்கள் குறித்து நாராணனிடம் வாஜ்பாய் விளக்கினார்.

அதே போல சனிக்கிழமை முஷாரபுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு தரப்படவுள்ளசிறப்பு வரவேற்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன் வாஜ்பாய் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜகத் மேத்தாவையும்சந்தித்துப் பேசினார். 1977ம் ஆண்டில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோதுவெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர் மேத்தா. பாகிஸ்தானை எப்படிக் யாைள்வது என்பது குறித்துவாஜ்பாய்க்கு மேத்தா பல யோசனைகளைத் தந்தததாகக் கூறப்படுகிறது.

மாலையில் காஷ்மீர் மாநில ஆளுனர் சக்சேனாவையும் வாஜ்பாய் சந்தித்தார். வெள்ளிக்கிழமை முழுவதுமே மிகபரபரப்புடன் இருந்த பிரதமர் தொடர்ந்து பல துறை அதிகாரிகளுடனும் முஷாரப் சந்திப்புக் குறித்துஆலோசனைகள் நடத்தியவண்ணம் இருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X