ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்ய முடியாது: மத்திய அரசுக்கு ஜெ. பதில்
சென்னை:
கருணாநிதி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி கமிஷன்அளிக்கும் பரிந்துரையின்படிதான் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரிகள்எவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை முடியாது எனவும் மத்திய அரசின் நோட்டீசுக்குபதிலளித்து உள்ளது தமிழக அரசு.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது முரட்டுத்தனமாக நடந்த போலீஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்குஉத்தரவிட்டு இருந்தது.
இந்த நோட்டீசுக்கு தமிழக அரசு பதில் அனுப்பி உள்ளது.
இதில் மத்திய அரசு கூறி உள்ளதுபோல் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. நீதிபதி ராமன் தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணைகமிஷனின் பரிந்துரையின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் மத்திய அரசுநேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறப்படுள்ளது.
மனித உரிமைக் கமிஷனுக்கும் பதில்:
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைக் கமிஷனும் நோட்டீஸ்அனுப்பியிருந்தது.
இதற்கு தமிழக அரசு 1 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறிஇருந்தது. ஆனால் தமிழக அரசு 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு இருந்தது.
இப்போது மனித உரிமை கமிஷனுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதில்,கருணாநிதி கைது செய்யப்பட்ட போது மனித உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.
முன்பு டி.கே.போஸ் என்பவருக்கும மேற்குவங்க அரசுக்கும் இடையில் நடந்தவழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன என்ன விதிமுறைகளை வகுத்து இருக்கிறதோ, அவைஅனைத்தும் இந்த கைது விவகாரத்தில் கடை பிடிக்கப்பட்டு உள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், டி.ஆர்.பலு ஆகியஎவரும் தரக்குறைவாக நடத்தப்படவில்லை.
அவர்கள் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளது.
போலீசார் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும் முன்னதாக கூறப்பட்ட கருத்துக்கள் இதில்இடம் பெறவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications