பாதுகாப்புக்காக ஹெலிகாப்டரில் சென்ற முஷாரப்
ஆக்ரா:
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை அடுத்து ஆக்ரா முழுக்க மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டேக்கள், உ.பி, ராஜஸ்தான் போலீசார் ஆகியோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றிய வண்ணம் உள்ளனர்.
முஷாரபின் பாதுகாப்பைக் கருதி அவரை விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு விமானப் படைஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஆக்ராவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் காலையில் வந்திறங்கியது முஷாரபின்சிறப்பு போயிங் விமானம். அங்கிருந்து முஷாரபையும் அவரது மனைவியுைம் முதலில் காரில் தான் அமர் விலாஸ்ஐந்து நட்சத்திர ஹோட்டலுகக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் இருவரும் ஹோட்டலுக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டர் பிரதமர் வாஜ்பாய் தங்கியுள்ள ஜே.பி பாலஸ் ஹோட்டல் அருகே அமைக்கப்பட்டுள்ளஹெலிகாப்டர் தளத்தில் தரையிரங்கியது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் முஷாரப் அமர் விலாஸ் ஹோட்டலுக்குச்சென்றார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த முஷாரப் பின்னர் தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுவாஜ்பாய் தங்கியுள்ள ஜே.பி. பாலஸ் ஹோட்டலுக்கு வந்தார்.
இங்கு தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கார் மூலம் விமானப் படைத் தளத்திலிருந்து ஹோட்டலுக்கு பர்வேஸ் செல்வார் என எதிர் பார்த்துஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் கூடியிருந்தனர். ஆனால், அவர் ஹெலிகாப்டர் மூலம்சென்றதையடுத்து அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications