இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை வெற்றி

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா:

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முதல் கட்ட சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது.

முதலில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும் தனியே சந்தித்து 1 மணி 40 நிமிடம்பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களுடன் இந்திய அமைச்சர்கள் அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, முரசொலி மாறன், ஜஸ்வந்த் சிங்,அதிகாரிகள் ஆகியோரும் பாகிஸ்தான் தரப்பில் சத்தார் உள்பட மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பும் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பேச்சுவார்த்தை நீடிதததால் மதிய உணவைக் கூட ஒத்தி வைத்தனர்.மிகத் தாமதமாகத் தான் மதிய உணவை உண்டனர். அப்போதும் கூட பேச்சுவார்த்தை நீடித்தது.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரும் பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளரும் மிகுந்த மகிழ்ச்சியான முகத்துடன் நிருபர்களை எதிர்கொண்டனர்.

பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக நிருபர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், பேச்சுவார்த்தையின்விவரங்கள் குறித்து விவரம் கூற மறுத்துவிட்டனர்.

பிற்பகலில் முஷாரபும் அவரது மனைவியும் தாஜ்மகாலைப் பார்க்கச் செல்கின்றனர். அவர்கள் அங்கிருந்து திரும்பியபிறகு வாஜ்பாய்- முஷாரப் இடையே மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+