மனைவியுடன் தாஜ்மகால் சென்றார் முஷாரப்
ஆக்ரா:
தனது மனைவி பேகம் ஷெபாவுடன் தாஜ்மகாலைக் காணச் சென்றார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
இப்போது தான் முதன்முதலாக தாஜ்மகாலைக் காண்கிறார் முஷாரப்.
தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பகுதி சுற்றுச்சூழல்ரீதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால்முஷாரப் மற்றும் அவரது குழுவினர் பெட்ரோல்-டீசல் உபயோகிக்காத எலெக்ட்ரிக் வேன்களில் தான்தாஜ்மகாலுக்கு சென்றனர்.
தனது ஹோட்டல் அறையிலிருந்து காலையில் தாஜ்மகாலைப் பார்த்த முஷாரப், இது போன்ற ஒரு நினைவுச்சின்னத்தை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை என பிரதமர் வாஜ்பாயிடம் முஷாரப் கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜ்மகாலில் நுழைந்த அதிபரும் அவரது மனைவியும் அதன் ஒவ்வொரு பகுதி குறித்தும் விளக்கம் கேட்டுக்கொண்டே வந்தார்.
கிரீம் கலர் சட்டையும் கருப்பு பேண்ட்ஸ்சும் அணிந்து மேல் பட்டனை திறந்துவிட்டபடி மிக உற்சாகமாக வந்தார்முஷாரப். தனது மனைவியுடன் தாஜ்மகால் எதிரே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது இருவர்முகத்திலும் வெட்கம் பீரிட்டதைக் காண முடிந்தது.
தாஜ்மகாலுக்குள் நுழையும் முன் பிற பார்வையாளர்களைப் போலவே முஷாரபும் அவரது மனைவியும்காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நடந்து சென்றனர்.
முஷாரபின் வருகையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தாஜ்மகாலைக் காண பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications