கிரிக்கெட் : இந்திய அணி இன்று இலங்கை செல்கிறது
சென்னை:
இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியஅணி இன்று (திங்கள் கிழமை) மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது.
இந்த 3 நாடுகள் மோதும் ஒரு நாள் ஆட்டம் வருகிற 18ம்தேதி தொடங்கி ஆகஸ்டு 5ம்தேதி முடிகிறது. பகல் இரவுஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கும், பகல் ஆட்டம் காலை 9.30 மணிக்கும் தொடங்க விருக்கிறது.
பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும் இலங்கையும் ஆடவிருக்கின்றன.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் காலில் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருவதால் ,அணியில் இடம் பெறவில்லை.
அவருக்குப் பதிலாக அமய் குரேஷியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கேப்டன் கங்குலி கூறுகையில்,
வீரர்களுக்கு திடீரென்று காயம் ஏற்படுவது இயற்கைதான். டெண்டுல்கர் இல்லாமல் ஆடுவதற்கு இந்திய அணிகற்றுக் கொள்ளும். இருப்பினும், டெண்டுல்கர் இருந்தால் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்என்றார்.
ஜிம்பாப்வேயில் பெற்ற தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் நாங்கள் களமிறங்க உள்ளோம் என்று கூறினார்.
மேலும், சில இந்திய வீரர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக வந்த குற்றச் சாட்டையும் கங்குலிமறுத்தார். ஏற்கனவே,இதுதொடர்பாக வந்த குற்றச் சாட்டுக்கு இந்திய அணியின் மேனேஜர் சேட்டன் சவுகான்மறுப்புத் தெரிவித்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications