அதிமுக-காங்கிரஸ் மோதல் ஆரம்பம்
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனை நீக்கும் வரை காங்கிரசுடன் அதிமுக உறவு வைக்கவேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழக செயலாளர் செங்கோட்டையன் முதல்வர் ஜெயலலிதாவுக்குகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திராவிடக் கட்சிகள் இனிமேல் ஆட்சியில் இருக்கக் கூடாது,அதிமுக ஆட்சியில் இருப்பது தவறு என்றரீதியில் மதுரையில் நடந்த ஐ.என்.டி.யு.சி மாநாட்டில் இளங்கோவன்பேசியுள்ளார்.
எனவே அவரைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அக்கட்சி மேலிடம் நீக்க வேண்டும்.
அதுவரை காங்கிரசுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்கிறேன். இளங்கோவன் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அதிமுக தொண்டன் ஓயமாட்டான் என்றும் அவர்கூறியுள்ளார்.
ஏற்கனவே பா.ம.க. கூட்டணியிலிருந்து பிரிந்து விட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில்பேசிய இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகவும் கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டியிருந்தார்.
அதற்கடுத்து இப்போது மதுரையிலும் அதிமுகவைத் தாக்கி பேசியுள்ளதையடுத்து, அதிமுக சார்பில் இந்தளவுக்குகாட்டமாக அறிக்கை விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் செங்கோட்டையனால் இது போன்றஅறிக்கை எல்லாம் விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே!
இது 2 கட்சிகளுக்கும் இடையே மேலும் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள்கருதுகிறார்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications