தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயப்படவில்லை - கங்குலி
சென்னை :
காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து வந்த மிரட்டலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் யாரும்பயப்படவில்லை என்று கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியஅணி இன்று (திங்கள்கிழமை) பகலில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
புறப்படும் முன் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கேப்டன் கங்குலி கூறியதாவது,
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வலுவாக உள்ளதால், நாங்களும் கடுமையாக போராடவேண்டியிருக்கும்.
டெண்டுல்கர் காலில் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருவதால், அணியில் இடம் பெறவில்லை.
அவருக்குப் பதிலாக அமய் குரேஷியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அமய் குரேஷியா ஒரு நல்லஆட்டக்காரர்தான்.அவர் ஆட்டத்தின் மீது எனக்கும் பயிற்சியாளர் ஜான் ரைட்டுக்கும் நம்பிக்கையிருக்கிறது.அதனால்தான் அவர் தேர்வு செய்யப் பட்டார்.
டெண்டுல்கருக்கு பெரிய காயமோ, எலும்பு முறிவோ இல்லை. வீரர்களுக்கு திடீரென்று காயம் ஏற்படுவதுஇயற்கைதான். அதனால் இதை பெரிது படுத்தத் தேவையில்லை.
டெண்டுல்கர் இல்லாமல் ஆடுவதற்கு இந்திய அணி கற்றுக் கொள்ளும். இருப்பினும், டெண்டுல்கர் இருந்தால்அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ஜிம்பாப்வேயில் பெற்ற தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் நாங்கள் களமிறங்க உள்ளோம். சில இந்தியவீரர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக வந்த குற்றச் சாட்டு தவறானது என்றார் கங்குலி.
ஏற்கனவே,இதுதொடர்பாக வந்த குற்றச் சாட்டுக்கு இந்திய அணியின் மேனேஜர் சேட்டன் சவுகான் மறுப்புத்தெரிவித்திருந்தார்.
அணியில் இடம் பெற்ற வீரர்கள் பெயர்கள்:
சவுரவ் கங்குலி (கேப்டன் ), ராகுல் டிராவிட்(துணைக் கேப்டன்), வி.வி.எஸ்.லக்ஸ்மன், ஹேமங் பதானி, சமீர் டிகே(கீப்பர்), ஜாஹிர் கான், ஆஷிஸ் நேரா, வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ரீடிந்தர் சிங் சோதி, தேபாஷிஸ் மொகந்தி,அஜத் அகர்கர், ராகுல் சங்வி, யுவராஜ் சிங் மற்றும் அமய் குரேஷியா.
இந்த 3 நாடுகள் மோதும் ஒரு நாள் ஆட்டம் வருகிற 18ம்தேதி தொடங்கி ஆகஸ்டு 5ம்தேதி முடிகிறது. பகல் இரவுஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கும், பகல் ஆட்டம் காலை 9.30 மணிக்கும் தொடங்க விருக்கிறது.
பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும் இலங்கையும் ஆடவிருக்கின்றன.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications