முதலிரவு அறையில் கைதான திருட்டு மணமகன்
திருவெற்றியூர்:
திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் முதலிரவின்போது கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த திருவெற்றியூரில் ஒரு மருந்துக் கடையில் சமீபத்தில் இரவில் பூட்டை உடைத்துக் கொள்ளைஅடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகை வெங்கடேசன் (வயது30) என்ற பழைய குற்றவாளியின் கைரேகையோடு ஒத்துப் போனது. இவர் மீது 20க்கும் மேற்பட்ட போலீஸ்ஸ்டேசன்களில் வழக்குகள் உள்ளன.
இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், வெங்கடேசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தார். போலீசாரின் கையில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வந்தார்.
இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந் நிலையில் வெங்கடேனுக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் மகளுக்கும் திருமணம்நடக்க இருப்பதாக போலீசாருக்கு ஒரு கொரியர் தபால் வந்தது. ஆனால், அந்தக் கொரியர் திருமண நாளன்றுஇரவு தான் போலீஸ் கைக்கு வந்தது.
உடனடியாக போலீசார் திருவண்ணாமலை போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் நள்ளிரவு1.15 மணிக்கு திருமண வீட்டுக்கு விரைந்தனர். அங்கு வீட்டாரிடம் போலீசார் விசாரித்தபோது மணமகனும்மணமகளும் முதலிரவு அறைக்குள் இருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து முதலிரவு அறையின் கதவைத் தட்டிய போலீசார் வெளியே வந்த வெங்கடேசனைக் கைது செய்தனர்.
போலீசார் விசாரித்தபோது, தன்னை ஒரு பைனான்சியர் என்று கூறி கவுன்சிலரை ஏமாற்றி அவரது பெண்ணைவெங்கடேசன் திருமணம் செய்ததும் தெரியவந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications