பிரபாத் குமாரை ஆளுநராக்க கோருகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநராக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் பிரபாத் குமாரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி விலகி விட்டதால் ஆந்திர ஆளுநராக உள்ள டாக்டர் சி. ரங்கராஜன் இடைக்கால ஆளுநராகநியமிக்கப்பட்டார்.
ஆனால், ரங்கராஜனுக்கு 2 மாநிலப் பணிகளும் கடுமையாக இருப்பதால், விரைவில் புது ஆளுநரை நியமிக்க அவர் கோரியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலாளரும், தற்போதைய ஜார்க்கண்ட் ஆளுநருமான பிரபாத் குமாரை தமிழக ஆளுநராகநியமிக்குமாறு மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், மத்திய அரசு இதை ஏற்குமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications