குருவாயூர் வன்முறை: ஜெ.யுடன் வந்த போலீஸ் தான் காரணம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை கொடுக்க சென்ற போது அவருடன்வந்திருந்த தமிழக போலீசார் கோவிலுக்குள் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சிதலைவர்களில் ஒருவரும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருமான ஏ. ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சென்னையில் தங்கி இருக்கும் ராஜா இது குறித்து பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு ஃபேக்ஸ் செய்தி ஒன்று அனுப்பி உள்ளார்.
அவர் அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வந்திருந்தபோது தமிழக போலீசார் கோவிலுக்குள் பத்திரிக்கையாளர்கள் மீதுதாக்குதல் நடத்தினர். குறிப்பாக சன் நெட் ஒர்க்கை சேர்ந்த சூர்யா டிவி நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
முன்னதாக ஜெயலலிதாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் பலரை கைது செய்தனர்.பழமை வாய்ந்த குருவாயூர் கோவிலுக்குள் இது போன்ற வன்முறை நடைபெற்றது அதுதான் முதல் முறையாகும்.
கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் குருவாயூர் பயணத்தைஒத்தி வைக்குமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்திவைக்கவில்லை.
இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications